Ind Vs Aus டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலியாவின் கோட்டையை தகர்த்தது இந்தியாவின் இளம் படை

0
118

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடந்தது.

இந்தப் போட்டியில் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இந்த போட்டியில் வென்றதன் மூலம், நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரையும் 2-1 என்ற கணக்கில் இந்தியா தனதாக்கியுள்ளது.

இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்தியா சார்பில் களமிறங்கிய பந்துவீச்சாளர்கள் போதுமான அளவுக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள் என்றாலும், போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தியது சமூக ஊடகங்களில் பரவலான பாராட்டை பெற்றது.

இந்த போட்டியில், இந்திய பந்துவீச்சாளர்களிலேயே அதிக டெஸ்ட் அனுபவம் கொண்ட பந்துவீச்சாளர் என்றால் அவர் மொஹம்மத் சிராஜ் தான். பேட்டிங்கைப் பொறுத்தவரை இந்தியாவின் நட்சத்திர பேஸ்மேனான விராட் கோலி பங்குபெறவில்லை.

“எனக்கு ஏமாற்றமாக உள்ளது; ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் உயிர்ப்புடனும் நல்ல நிலையிலும் உள்ளது. (ரிஷப்) பந்த்-இன் இன்னிங்ஸ் ஹெடிங்லேவில் பென் ஸ்டோக்ஸ் ஆடிய ஆட்டத்தை எனக்கு நினைவூட்டியது,” என்று இந்தப் போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் பிபிசியின் 5 லைவ் ஸ்போர்ட்ஸ் எக்ஸ்ட்ரா வானொலி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

நன்றி : பிபிசி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here