ஒன்ப்ளஸ் நிறுவனம் ஒன்ப்ளஸ் 7 Pro ஸ்மார்ட்போனை நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிமுகம் செய்தது. 

புதிய ஒன்ப்ளஸ் 7 Pro,QHD+ திரை, 12GB வரையிலான RAM,  மற்றும் பாப்-அப் செல்பி கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என பல அம்சங்களை கொண்டு வெளியாகியுள்ளது.

புதிய ஒன்பிளஸ் 7 Pro ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD பிளஸ் ஆப்டிக் AMOLED நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 9.5 உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு நானோ சிம் வசதியை கொண்ட இந்த ஸ்மார்ட்போனுக்கு இரண்டு ஆண்டுகளுக்கான சாப்ட்வேர் அப்டேட் மற்றும் 3 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்ப்டேட் ஆகியவை கிடைக்கும் எனவும் இந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

HDR10+ தரம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன்களின் திரை நெட்ப்ளிக்சின் HDR வீடியோக்களை பார்க்கும் வசதி கொண்டுள்ளது. மேலும் டிஸ்ஃபிளே மேட்டால் A+ தரம் கொண்ட டிஸ்ஃபிளே என்ற சான்றிதழையும் பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கொரில்லா கிளாஸ் 5 பொருத்தப்பட்டுள்ளது. மிக குறைந்த வெளிச்சமாக 0.27நிட்ஸ் அளவு வரை இந்த ஸ்மார்ட்போனின் வெளிச்சத்தை குறைத்துக்கொள்ளலாம்.

இந்த ஸ்மார்ட்போனில்   48 மேகாபிக்சல், 8 மேகாபிக்சல் மற்றும் 16 மேகாபிக்சல் என மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 16 மேகாபிக்சல் கேமரா, வைட் ஆங்கிள் கேமராவாக இருக்கும் எனவும் 117 டிகிரி வரை விரிந்த அளவிலான புகைப்படங்களை இதன் மூலம் எடுக்க முடியும் எனக் கூறப்படுகிறது. அதே போல், 8 மேகாபிக்சல் கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 16 மேகாபிக்சல் அளவிலான பாப்-அப் செல்பி கேமரா இருக்கும்.  

 மேலும் ஒன்ப்ளஸ் 7 Pro-வில் 4000mAh பேட்டரி, டைப்-C சார்ஜ் போர்ட், அதிவேக வார்ப் சார்ஜர் 30(5V/ 6A) கொண்டு வெளியாகிறது.

இன்னும் பல வசதிகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 4G VoLTE மற்றும் வை-பை வசதி கொண்டும் மற்றும் ப்ளூடூத் v5.0 கொண்டும் வெளியாகவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆல்மண்ட் (Almond), சாம்பல் (Mirror Grey), மற்றும் ப்ளூ (Nebula Blue) ஆகிய மூன்று வண்ணங்களில் வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

சாம்பல் (Mirror Grey) வண்ணத்தில் மட்டும் கிடைக்கும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 48,999க்கும்  இதன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 52,999 ஆகும். இது ப்ளூ (Nebula Blue) வண்ணத்தில் மட்டும் கிடைக்கும். மேலும் இதன் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 57,999 ஆகும்.

இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இந்தியாவில் மே 17ஆம் தேதி அன்று துவங்கவுள்ளது. மே 17ஆம் தேதி அன்று சாம்பல்(Mirror Grey) வண்ணத்தினலான ஸ்மார்ட்போன்கள் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.

மே28ஆம் தேதி சந்தையில் ப்ளூ (Nebula Blue) வண்ண நிற போன்களை அறிமுகப்படுத்துகிறது. மேலும் ஆல்மண்ட்(Almond) வண்ண நிற போன்களை ஜூன் மாதத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here