#HBDDearestThalaAJITH : இன்று அஜித் பிறந்தநாள்: சாதனை படைக்கும் ரசிகர்கள்

0
307

நடிகர் அஜித் இன்று தனது 49 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இன்றைய நாளைக் கொண்டாட அஜித் ரசிகர்கள் என்றிலிருந்தோ டிவிட்டரில் அடிக்கடி டிரென்டிங் செய்து வருகிறார்கள்.

இன்று(வெள்ளிக்கிழமை) அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு,
#HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.16 மணி நேரத்தில் இந்த ஹேஷ்டேக்கில் 60 லட்சம் டிவீட்டுகள் இதுவரை பதிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், டிவிட்டரில் 24 மணி நேரத்தில் 1 கோடி டிவீட்டுகள் பதிவிடப்பட்டு, அதிக டிவீட்டுகள் பதிவிடப்பட்ட சாதனையை தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் பிறந்ததின ஹேஷ்டேக்கான
#HappyBirthdayPawanKalyan சாதனை புரிந்துள்ளது. அந்த சாதனையை இன்னும் 7 மணி நேரத்தில், அஜித் பிறந்தநாள் ஹேஷ்டேக்கான #HBDDearestThalaAJITH முறியடிக்க வேண்டுமென அஜித் ரசிகர்கள் வெறித்தனமாகக்காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்குள் அந்த சாதனையைப் புரிவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

முன்னதாக, சில தினங்களுக்கு முன்பாக 
#ThalaAJITHBdayGalaCDP என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அந்த ஹேஷ்டேக்குடன், 50 லட்சத்திற்கும் அதிகமான டிவீட்டுகளை 24மணி நேரத்தில் பதிவிட்டு அதை டிவிட்டரில் சாதனை படைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here