ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு அரசு ஆர்டர்கள் கொடுத்திருப்பதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் கூறியுள்ளார். அதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்த வேண்டும், அல்லது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க உறுதி செய்யப்பட்டிருந்த விலையைக் காட்டிலும் அதிகமான விலைக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது பாஜக அரசு.

விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதை ரத்து செய்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு பாஜக அரசு அளித்துள்ளது .

இந்நிலையில், கடந்த வாரம் மக்களவையில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு ஒப்பந்தம் அளித்துள்ளதாகக் கூறுகிறார். ஆனால் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துக்கு ஒரு ரூபாய் கூட அளவுக்குக் கூட ஒப்பந்தம் வரவில்லை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது .

1

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பொய் கூறினால், அந்த ஒரு பொய்யை மறைக்க, காப்பாற்றப் பல பொய்களைக் கூற வேண்டியது இருக்கும். பிரதமர் மோடி ரஃபேல் ஒப்பந்தத்தில் செய்த தவறை மறைக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பொய் கூறினார். நாளை நாடாளுமன்றத்தில் எச்ஏஎல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.1 லட்சம் கோடிக்கான ஆர்டர்கள் குறித்த ஆவணங்களைக் கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் அல்லது பாதுகாப்பு துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிடுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுடன் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியான செய்தியையும் இணைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here