H1B விசா வழங்குவதற்கு ஆறு மாதங்களுக்குத் தடை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் இந்திய ஐடி ஊழியர்கள் பாதிப்படைவார்கள் என தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் (National Association of Software and Services Companies – NASSCOM) தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 3ஆம் தேதி முதல் H1B விசா மீதான தற்காலிகத் தடை அமலுக்கு வரவுள்ளது. இந்தத் தடையினால் ஐடி ஊழியர்கள் பெருமளவு பாதிக்கப்படுவர். ஆனால் பிரீமிய முறையில் 1225 டாலர் கூடுதலாக செலுத்தப்படும் பட்சத்தில் 15 நாட்களில் விண்ணப்பத்துக்கு பதில் கிடைத்துவிடும். சாதாரணமாக H1B விசாவிற்கு பதில் கிடைக்க மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகும் என அமெரிக்கா அரசு கூறியுள்ளது.

இதையும் படியுங்கள் :“டிரம்ப்பால் நஷ்டத்தைச் சந்திக்கும் ஐடி நிறுவனங்கள்”: H1B விசா மசோதா தாக்கல்

H1B விசா மூலம் தொழில்நுட்ப அறிஞர்களும், மென்பொருள் அறிஞர்களும் அதிகளவில் அமெரிக்கா சென்று வருவர். வருடத்திற்கு 65 ஆயிரம் பேர் பணி நிமித்தமாகவும், அது தவிர்த்து கூடுதலாக 20 ஆயிரம் பேர் படிப்பிற்காகவும் இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்ல அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் டிரம்ப்பின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் H1B விசாவிற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐடி துறை மட்டுமல்லாது எந்தத் துறை நிறுவனங்களும் தாங்கள் நினைத்தவுடன் அமெரிக்காவுக்கு தங்கள் பணியாளர்களை அனுப்ப முடியாது. இது குறுகிய கால தடை என்றாலும் இது ஒரு பெரிய தடையாக இருக்காது என்று நாஸ்காம் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : H1B விசா வழங்கும் பணியைத் தற்காலிகமாக நிறுத்தியது அமெரிக்கா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்