H1B விசா வழங்கும் பணியைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க குடியுரிமை சேவைத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் வெளிநாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் H1B விசா மூலம், ஆண்டுக் கணக்கில் அங்கு பணிபுரிந்து வருகின்றனர். இதனால் அமெரிக்கர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்ற காரணத்தினால், H1B விசா நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு, அது தொடர்பான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : “டிரம்ப்பால் நஷ்டத்தைச் சந்திக்கும் ஐடி நிறுவனங்கள்”: H1B விசா மசோதா தாக்கல்

இந்நிலையில், புதிய H1B விசா வழங்கும் பணியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அமெரிக்க குடியுரிமை சேவைத்துறை அறிவித்துள்ளது. இதனால் வெளிநாட்டு ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமெரிக்க நிறுவனங்கள் பணிக்கு அமர்த்துப்படும் வெளிநாட்டு ஊழியர்களில் இந்தியாவைச் சேர்ந்த ஐ.டி ஊழியர்கள்தான் அதிகம்.

இதையும் படியுங்கள் : ”H1B விசா”: இரண்டே நாளில் 25 ஆயிரம் கோடி ரூபாயை இழந்த டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்