இந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை (இன்று) சரிவுடன் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 10.12 புள்ளிகள் சரிந்து 34,433.07 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 4.80 புள்ளிகள் சரிந்து 10,632.20 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவடைந்தது.

market

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.61ஆக உள்ளது.

அமெரிக்காவில் வெளிநாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் H1B விசா மூலம், அங்கு பணிபுரிந்து வருகின்றனர். இதனால் அமெரிக்கர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்ற காரணத்தினால், H1B விசா நீட்டிப்பு விதிமுறைகளை மாற்ற டிரம்ப் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது.

mid age man holding passport and boarding pass

மேலும் H1B விசா நீட்டிப்பு இனிமேல் வழங்கப்பட மாட்டாது எனவும் செய்திகள் வெளியாகியது. இதனால் அமெரிக்காவிலிருந்து லட்சக்கணக்கான இந்தியர்கள், வெளியேற வேண்டிய நிலை உருவானது. டிரம்ப் அரசின் இந்த முடிவினால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பாதகம் ஏற்படும் என இந்திய மென்பொருள் நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், H1B விசா நீட்டிப்பு விதிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றத்துறை தெரிவித்தது. இந்த அறிவிப்பால் இந்திய ஐடி நிறுவனங்கள் உற்சாகமடைந்தன.

Tata Consultancy Services

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலையில் 3.47 சதவிகிதம் உயர்ந்து காணப்படுகிறது. முந்தைய வர்த்தக நாளான செவ்வாய்க்கிழமையன்று 2,709.00 ரூபாயாக இருந்த பங்கு ஒன்றின் விலையில், 94.00 ரூபாய் உயர்ந்து 2,803.00 ரூபாயாகவுள்ளது. மேலும் இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ் பங்குகள் 2,816 ரூபாய் வரை வர்த்தகமாகி புதிய உச்சத்தைத் தொட்டது.

* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் அதிகபட்ச விலை : ரூ.2,816.00
* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் குறைந்தபட்ச விலை : ரூ.2,153.00

source: nseindia.com
source: nseindia.com

அதேபோன்று, விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் 2.90 சதவிகிதம் உயர்ந்தும், ஹெச்.சி.எல்.டெக் நிறுவனத்தின் பங்குகள் 2.47 சதவிகிதம் உயர்ந்தும்; டெக் மகேந்திரா நிறுவனத்தின் பங்குகள் 1.64 சதவிகிதம் உயர்ந்தும்; இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 1.10 சதவிகிதம் உயர்ந்தும் வர்த்தகமாகியது.

இதையும் படியுங்கள்: “கப்பல் படையில் மீனவர்களைச் சேருங்கள்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here