காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை அருகே நடைபெற்று வரும் ராணுவக் கண்காட்சி தொடர்பான நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இது தொடர்பான #GoBackModi என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங் ஆனது. தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளாவில் இந்த மீம்ஸ்கள் பகிரப்படுகிறன.