#FrenchOpen2020: இன்று(அக்.11)இறுதிப் போட்டி: பட்டம் வெல்லப்போவது யார்?

Rafael Nadal and Novak Djokovic will both be looking to create history when they meet in the blockbuster men's singles final of the French Open 2020. This will be the 56th meeting between the two.

0
135

பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் ஆண்கள் ஒற்றையா்பிரிவு இறுதிச்சுற்றில் உலகின் முதல்நிலை வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், 2-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆகியோா் மோதுகின்றனர்.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும்ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 12 முறை சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரபேல் நடாலுடன் (ஸ்பெயின்), ஜோகோவிச் மோதுகிறார்.

இந்த போட்டியில் நடால் வாகை சூடினால் 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வதுடன், அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற ரோஜர் பெரடரின்(சுவிட்சர்லாந்து) சாதனையை சமன் செய்வார். ஜோகோவிச் வென்றால் அவருக்கு இது 18-வது கிராண்ட்ஸ்லாமாக அமையும்.

இருவரும் இதுவரை 55 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றனர். இதில் ஜோகோவிச் 29 முறையும், நடால் 26 தடவையும் வென்றுள்ளனர். பிரெஞ்ச் ஓபனில் 7 முறை மோதி உள்ளனர். இதில் நடால் 6-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறார். ஓபன் எராவில் வேறு எந்த இரு வீரா்களும் இத்தனைமுறை நேருக்கு நோ் மோதியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் 2 நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

முன்னதாக, நடால் முதல் நபராக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்த நிலையில், ஜோகோவிச் தனது அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த கிரீஸ் வீரா் ஸ்டெஃபானோ சிட்சிபாஸை 6-3, 6-2, 5-7, 4-6, 6-1 என்ற செட்களில் வீழ்த்தி இறுதிச்சுற்றை அடைந்தாா்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here