Fact Check : கோவைட்-19(கொரோனா வைரஸ்) பாதிப்புக்கு இந்தியா மருந்து கண்டுபிடித்து விட்டதா?

Facebook page “Har Har PM” posted the link of an article along with a claim in Hindi which translates to, “India has found a cure for coronavirus! Patient recovers speedily”. Has Inda really found the cure? Find out!

0
397

சீனாவின் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் என்று அறியப்படும் கோவைட்-19 தொற்று பாதிப்பால் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் இந்தப் கொடிய நோயால் இதுவரை 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கோவைட்-19 தாக்கியிருக்கிறது. உலக நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரம் செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், கோவைட்-19 தொற்றுக்கு இந்தியா மருந்து கண்டுபிடித்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்தப் பதிவுகளில், “கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்யும் மருந்தை இந்தியா கண்டுபிடித்து விட்டது. நோயாளி விரைந்து குணமடைந்து வருகிறார்” எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

பகிரப்பட்டு வரும் பதிவுகளில் உள்ள செய்தி தொகுப்பில் கோவைட்-19 பாதிப்புக்கு இந்தியா மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறும் தகவல்கள் எதுவும் இடம்பெறவில்லை. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரல் பதிவுகளை பகிர்ந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியா மருந்தை கண்டுபிடித்து விட்டதாக கூறும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என்பது உறுதியாகி விட்டது.

202002201227276117-1-coronavirus-medicine-viral-post-scrn-L-styvpf

இணைய தேடல்களின் போது இந்தியா கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக எங்கும் அதிகாரபூர்வமாகக் குறிப்பிடவில்லை. அந்த வகையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியா மருந்தை கண்டுபிடிக்கவில்லை என்பது தெளிவாகி இருக்கிறது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here