கருணைக்கொலைக்கு அனுமதியளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

1. காமன் காஸ் என்னும் அரசு சாரா தொண்டு நிறுவனம் (Common Cause NGO), உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றைத் தொடுத்தது. அதில் தீராத நோய் தாக்கியவர்கள், கோமாநிலையில் இருப்பவர்களைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று குறுப்பிட்டிருந்தது. இந்த மனுவினை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

2. முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை (மார்ச்.9) உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், தீராத நோய் தாக்கியவர்கள், கோமாநிலையில் இருப்பவர்களைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம் என தெரிவித்துள்ளது.

3. மேலும், கண்ணியமாக வாழ ஒவ்வொருவருக்கும் உரிமை இருப்பதுபோன்று, உயிர்துறப்பதிலும் உரிமை இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. தீராத நோய், கோமாநிலயில் உள்ள நோயாளிகளின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், ரத்த உறவுகள் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்துள்ளது.

4. நோயாளி முற்றிலும் இயக்கமற்ற நிலையில் இருக்கும்போது மருத்துவ சிகிச்சைய நிறுத்திவிட்டு அவரைக் கருணைக் கொலை செய்வதை Passive euthanasia எனக் கூறப்படுகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி, அருணா ஷான்பாக் என்ற நோயாளியின் கருணைக் கொலை தொடர்பான வழக்கில் அனுமதியளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

5. நெதர்லாந்து, பெல்ஜியம், கொலம்பியா, கனடா ஆகிய நாடுகளில் கருணைக்கொலைகள் அனுமதிக்கப்படுகின்றன. அதேபோன்று மருத்துவரின் துணையுடன் சிகிச்சையை நிறுத்திவிட்டு கருணைத் தற்கொலைக்கு (Assisted suicide) சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்காவின் வாஷிங்டன், கலிஃபோர்னியா, ஓரேகான் ஆகிய மாகாணங்களில் சட்டப்பூர்வ அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது