சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஆண்ட்ராய்டு கைப்பேசி செயலி வெளியிட்டார்.

Dengue fever Tamil APP குறித்த தகவல்கள் :

கூகுள் பிளேஸ்டோரிலிருந்து (Google Play store) Dengue fever Tamil செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த செயலியில் டெங்குகாய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் கொசுக்கள் வளர ஏதுவான இடங்கள் படத்துடன் விளக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் கேள்வி பதில் பகுதியும், சித்த மருத்துவம் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதம் குறித்தும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபலங்கள் பேசிய குறும்படங்கள் இந்த செயலியில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்குறும்படங்கள் வாட்ஸ் அப் (Whats App) மூலமாக பொதுமக்களை சென்றடையும் வகையில் வெளியிடப்படவுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கும் அவசர உதவிக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய 104, 108 மற்றும் பொது சுகாதாரத்துறையின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் செயலியில் இருந்தே இந்த எண்ணை தொடர்புகொள்ளும் விதமாக செயலி எளிதாக அமைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்