ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் 125 முறை விதிகள் மாற்றப்பட்டுள்ளதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடி, கடந்த நவம்பர் 8ஆம் தேதியன்று, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். மக்கள் தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக டிசம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று, டிச.30ஆம் தேதி வரை, பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஒரு நபரின் கணக்கில் அதிகபட்சம் 5000 ரூபாய் மட்டுமே செலுத்த முடியும் என மத்திய அரசு அறிவித்தது.

இதையும் படியுங்கள் : #Demonetisation: “5 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்”; சிரமத்தை மட்டுமே ஏற்படுத்தும் புதிய விதிகள்

இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, “பிரதமரின் வார்த்தைகள் ஈர்ப்புடன் இருக்க வேண்டும். டிசம்பர் மாதம் 30ஆம் தேதி வரை பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்றார். ஆனால் நேற்று (கடந்த திங்கட்கிழமை) டிச.30வரை பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியாது என்கிறார். ரூபாய் நோட்டு விவகாரத்தில் விதிகள் 125 முறை மாற்றப்பட்டுள்ளது” என்றார். மேலும், ”பிரதமர் மோடி தனது உடைகளை மாற்றுவது போல், மத்திய ரிசர்வ் வங்கி விதிகளை மாற்றி வருகிறது” என தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்