பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மோசமான விளைவுகள் இனிமேல்தான் ஏற்படும் என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், ”மோடியின் இந்த நடவடிக்கை ஒரு பேரவழிவாகும், இது நாட்டை கடுமையாக காயப்படுத்தியுள்ளது” என்றார். மேலும் அவர், ரூபாய் நோட்டு ஒழிப்பால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதம் குறையும் என்றும் கூறியுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் ஏற்பட்ட வேலைவாய்ப்பு குறைவால் விவசாயம் மற்றும் முறைசாராத் துறையில் தேசிய வருமானத்தில் 45 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: #DeMonetisation: ”நிர்வாகத்தின் தோல்வியைக் காட்டுகிறது”- மன்மோகன்சிங்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்