பிரதமரின் ரூபாய் நோட்டு ஒழிப்பு இந்தியாவை இரண்டாக பிரித்துவிட்டதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இமாச்சலப் பிரதேசம் மாநிலம் தர்மசாலாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ரூபாய் நோட்டுக்கு எந்தவொரு நிறமும் இல்லை என்றும், அது நேர்மையான நபர்களிடம் உள்ளதா அல்லது நேர்மையற்ற நபர்களிடம் உள்ளதா என்பதில்தான் உள்ளது என்றும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : #demonetisation : எங்கும் வேலையில்லை; முடங்கும் ஜவுளி நிறுவனங்கள்

மேலும், ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டு ஒழிப்பு ஏழை மக்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும், இதனால் நாட்டு மக்களை பிரதமர் இரண்டு தரப்பாக பிரித்து விட்டதாகவும், அதன் ஒரு பகுதியில் ஒரு சதவீத பணக்காரர்களும், மற்றொரு பகுதியில் நடுத்தர மற்றும் ஏழை மக்களும் உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள் : #Demonetisation: ”எமர்ஜென்சியைத் தவறு என இந்திரா காந்தி ஒத்துக்கொண்டது போல் மோடியும் தவறை ஒத்துக்கொள்ள வேண்டும்”

இந்தியாவில் வெறும் ஆறு சதவீத கறுப்புப் பணம்தான் உள்ளது என்றும், மீதமுள்ள 94 சதவீத கறுப்பு பணம் ரியல் எஸ்டேட், தங்கம், சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ரூபாய் நோட்டு ஒழிப்பினால் தோட்டக்கலை, விவசாயம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகள் கடுமையாக பாதிக்கிப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்