ரூபாய் நோட்டு தடையின் மூலம் நாட்டின் நிதி முதுகெலும்பை மோடி உடைத்துவிட்டார் என காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், எப்போது நல்ல நாட்கள் வரும் என்று மக்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் 2019ஆம் ஆண்டுதான் அந்த நல்ல நாட்கள் வரும். இந்திய வரலாற்றில் எடுக்கப்பட்ட மோசமான முடிவு பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஆகும். மோடியின் தனிப்பட்ட விருப்பத்தில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதையும் படியுங்கள்: #Demonetisation: ”125 முறை விதிகளை மாற்றியுள்ளார்கள்; மோடி உடைகளை மாற்றுவது போல் ஆர்பிஐ விதிகளை மாற்றுகிறது”

மேலும் அவர், ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளை பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் பலவீனப்படுத்தி வருகின்றனர். கடந்த 70 ஆண்டுகளில் நாங்கள் செய்யாததை மோடி இரண்டே வருடத்தில் செய்து விட்டார். கடந்த 70 ஆண்டுகளில் நாங்கள் மக்களுக்காக என்ன செய்தோம், என்ன செய்யவில்லை என்பது மக்களுக்கு தெரியும். அதை அவரிடம் சொல்ல விரும்பவில்லை. நம் அமைப்பு ஒருபோதும் பலவீனமடைந்ததில்லை, நாட்டிற்காக எங்கள் வியர்வையையும், இரத்தத்தையும் தியாகம் செய்வோம். இந்த இரண்டு ஆண்டுகளில் மோடி பல அமைப்புகளை அழித்துவிட்டார் எனவும் குற்றம் சாட்டினார்.

இதையும் படியுங்கள்: #Demonetisation: ”பணக்காரர்கள், ஏழைகள் என இரண்டு பிரிவாக நாட்டைப் பிரித்து விட்டார் மோடி”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்