பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் வங்கியின் பணப்பரிவர்த்தனைகளை ஆய்வு செய்யும் வருமான வரித்துறை, தற்போது அனைத்து வங்கிகளிடமும் 2016 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2016 நவம்பர் 9ஆம் தேதி வரை உள்ள சேமிப்பு கணக்குகளின் பண இருப்பு விவரங்களை கேட்டுள்ளது. மேலும் வங்கி கணக்கு தொடங்கிய நாள் முதல் இன்றுவரை நிரந்த கணக்கு எண் அல்லது படிவம் 60 வழங்காமல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த வருடம் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

இதையும் படியுங்கள் : #Demonetisation: ”செல்லாத நோட்டுகள் எவ்வளவு வந்துள்ளன என்பது பற்றி எனக்குத் தெரியாது”

தற்போது வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பின் நவம்பர் 10ஆம் தேதி முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை 2.5 லட்சம் ரூபாய்க்கும் மேல் அதிகமாக இருப்பு வைக்கப்பட்ட சேமிப்பு கணக்கு மற்றும் 12.5 லட்சம் ரூபாய்க்கும் மேல்அதிகமாக இருப்பு வைக்கப்பட்ட நடப்பு கணக்கின் விவரங்களை சமர்ப்பிக்கும்படி வருமான வரித்துறை கேட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரு நாளைக்கு 50,000 ரூபாய்க்கும் அதிகமாக இருப்பு வைத்த கணக்குகளின் விவரங்களையும் கேட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : #Demometisation: 90% பணம் வங்கிகளுக்கு வந்து விட்டது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்