மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கையால் வேலையிழப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் ஆடை தயாரிக்கும் சிறுதொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் பணி புரிந்து வந்த ஊழியர்கள், பணத்தட்டுப்பாட்டால் தற்போது வேலையிழந்து தவித்து வ்ருகின்றனர். மதுராவில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணி புரியும் ஊழியரான அமித் என்பவர், தங்களுக்கு ஒரு மாதமாகவே வேலை இல்லை என்றும், பணத்தட்டுப்பாட்டால் எந்தத் தொழிற்சாலைகளிலும் வேலைக் கொடுப்பதில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார். அதே போன்று சிறுதொழில் செய்து வரும் முதலீட்டாளர்கள், தங்களின் தயாரிப்புகளுக்காக ஆகும் செலவுகளைக் காட்டிலும், பணப் புழக்கம் குறைவால் நஷ்டம்தான் ஏற்படுகிறது என்கின்றனர்.

இதையும் படியுங்கள் : ”40 கோடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்”

அமித்
அமித்

வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு எடுத்த நடவடிக்கையால் வேலையிழப்பு அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது. தினம் தினம் வரும் புதுப்புது அறிவிப்புகளால் வேதனைதான் அதிகரித்துள்ளது.

saree

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்