பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூரில், தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் நூதன முறையில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உற்பத்திக்கு ஏற்ற விலை கிடைக்காததால் விவசாயிகள் மனவேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் சத்தீச்கர் மாநிலம் ராய்ப்பூரில், 300க்கும் மேற்பட்ட 4 மாவட்ட விவசாயிகள், 1000 கிலோ தக்காளியை பொதுமக்களுக்கு இலவசமாகக் கொடுத்து, தங்களின் எதிர்ப்பை நூதன முறையில் வெளிப்படுத்தினர்.

இதையும் படியுங்கள் : தக்காளி கிலோ 50 காசுக்கு விலை போனதால் விவசாயிகள் விரக்தி; சாலையில் கொட்டி அழித்தனர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்