Cosmic Crisp : அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்த ஆப்பிள் : இதன் சிறப்பு என்ன தெரியுமா?

0
114

ஆப்பிள் காஸ்மிக் கிரிஸ்ப் ரக ஆப்பிள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. இது ஒரு வருடத்துக்குக் கெடாமல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

‘காஸ்மிக் கிரிஸ்ப்’ என்று பெயரிட்டப்பட்டுள்ள இந்த ஆப்பிள் பிரிட்ஜில் வைத்தால் சுமார் ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு ‘ஹனிகிரிஸ்ப்’ மற்றும் ‘எண்டர்ப்ரைஸ்’ ஆகிய ரகங்களைக் கலந்து உருவானது என்பதால் ‘காஸ்மிக் கிரிஸ்ப்’ என இந்தப் பெயர் வைத்துள்ளனர். 1997ஆம் ஆண்டிலேயே வா‌ஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இந்த ஆப்பிள் பயிரிடப்பட்டது எனவும் தெரிவித்தனர்.

சாறு நிறைந்த இந்த ஆப்பிள் திடமாகவும் மிதமாகவும் இருக்கும். இந்த ஆப்பிள் ரகத்தை விற்பனைக்குக் கொண்டுவர 10 மில்லியன் டாலர் செலவிட்டிருப்பதாவும் சொல்கிறார்கள். இந்திய மதிப்பில் இது சுமார் 72 கோடி ரூபாய் ஆகும்.

அடுத்த பத்தாண்டுகளுக்கு வா‌ஷிங்டன் மாகாண விவசாயிகள் இந்த ஆப்பிளை விளைவிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் 12 காஸ்மிக் கிரிஸ்ப் ஆப்பிள் மரங்களை வளர்க்க 40 மில்லியன் டாலர் (சுமார் 288 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளனர்.

காஸ்மிக் கிரிஸ்ப் ஆப்பிளைக் கண்டுபிடித்த வா‌ஷிங்டன் பல்கலைக்கழகக் குழுவினரில் ஒருவரான கேட் எவன்ஸ், “இந்த ஆப்பிள் மிக மிருதுவாகவும் திடமாகவும் இருக்கும். இனிப்பும் புளிப்பும் சேர்ந்து சுவையைக் கொண்டிருக்கும். நீர்ச்சத்தும் இதில் அதிகமாகக் காணப்படும்.” என்கிறார்.

குறிப்பாக, “பறித்த நாளிலிருந்து பிரிட்ஜில் பத்திரமாக வைத்திருந்தால், 10 முதல் 12 மாதங்கள் வைத்திருந்து சாப்பிடலாம். தரம் மற்றும் சுவையிலும் கெடாமல் நன்றாக இருக்கும்.” எனவும் அவர் தெரிவிக்கிறார்.

விற்பனைக்கு வந்திருக்கும் காஸ்மிக் கிரிஸ்ப் ஆப்பிள் ஒரு கிலோ சுமார் 4 டாலருக்கு விற்கப்படுகிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here