“நானும் தேசத்தின் பாதுகாவலனே” என்ற ஹேஷ்டேக் கொண்ட தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் நேற்று (சனிக்கிழமை) தொடங்கினார்.

2014 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, ஆட்சிக்கு வந்தால் மக்களின் பணத்தையும், நம்பிக்கையும் பாதுகாக்கும் பாதுகாவலனாக செயல்படுவேன் என்று நரேந்திர மோடி கூறினார். அதன்பிறகு, அவர் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரும் ஆனார்.

ஆனால், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் என்று குறிப்பிட்டார். இதன்மூலம், தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் (ChowkidarChorhai) என்ற ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆனது. இதன்மூலம், பாதுகாவலர் என்று பிரதமர் மோடி முன்மொழிந்த சொல் விமரிசனமாக மாறியது.

இந்நிலையில், அதே பாதுகாவலர் என்ற சொல்லை பயன்படுத்தி பிரதமர் மோடி 2019 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். பிரதமர் மோடி சனிக்கிழமை தனது டிவிட்டர் பக்கத்தில் “உங்களுடைய பாதுகாவலன் உறுதியாக நின்று நாட்டுக்கே சேவையாற்றி வருகிறேன். ஆனால், நான் தனி நபர் அல்ல. ஊழலுக்கு எதிராகவும், சமூகத்தில் நிலவும் தீய செயல்களுக்கு எதிராகவும் போராடும் அனைவருமே பாதுகாவலர் தான். நாட்டின் வளர்ச்சிக்காக கடினமாக உழைக்கும் அனைவருமே பாதுகாவலர் தான். இன்று, அனைத்து இந்தியர்களும் ‘நானும் தேசத்தின் பாதுகாவலனே’ #MainBhiChowkidar என்று சொல்கின்றனர்” என்றார். மேலும், இந்த பதிவின் முடிவில், ‘நானும் தேசத்தின் பாதுகாவலனே’ #MainBhiChowkidar என்ற உறுதிமொழியை ஏற்று ஹேஷ்டேக்கை டிவீட் செய்யுமாறும் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று (சனிக்கிழமை) நானும் தேசத்தின் பாதுகாவலனே” என்ற ஹேஷ்டேக்கை அவர்களே டிரெண்ட் செய்தார்கள்.

இந்த பிரதமர் மோடியின் பதிவுக்குப் பதிலளித்த காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடிக்கு ஆதரவாக இந்தப் பதிவை வெளியிடுகிறேன்’ என்று கூறி பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், இந்திய வங்கிகளில் கடன்பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்குச் சென்ற தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி மற்றும் தொழிலதிபர்கள் அனில் அம்பானி, கெளதம் அதானி ஆகியோர் பிரதமர் மோடியின் பின்னணியில் இருக்கும்வகையில் வடிவமைக்கப்பட்ட புகைப்படத்தின் கீழ், “நானும் பாதுகாவலரே’ என்ற வாசகத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.

அந்தப் பதிவில், “இப்போது நீங்கள் குற்றவாளியாக உணருகிறீர்களா?’ என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தனது டிவிட்டர் பக்கத்தில் , “திருடனாக இருக்கும் ஒரே பாதுகாவலர் பிரதமர் மோடி மட்டுமே. அவர் ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஆடையை அணிந்து வருகிறார். இந்திய வங்கிகளில் கடன்வாங்கிவிட்டு ஏமாற்றியவர்களை அவர் தப்பவிட்டார். மக்கள் பணம் ரூ.52,000 கோடியை சுயவிளம்பரத்துக்காக அவர் பயன்படுத்தினார். மக்களின் பணம் ரூ.2,010 கோடியைச் செலவழித்து 84 நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் (chowkidar) ‘காவல்காரர்’ மோடி என்று மாற்றியுள்ளார், அதனைத் தொடர்ந்து பாஜக தலவர் அமித் ஷா, மற்ற பாஜக தலைவர்களும் டிவிட்டரில் தங்களது பெயர்களுக்கு முன்னால் (chowkidar) ‘காவல்காரர்’ என்று சேர்த்துள்ளனர். தேர்தல் வருதுல்ல இப்படி பல காமெடிகளை பார்க்கலாம் . காவல்காரர் என்பதெல்லாம் டிவிட்டரோடு மட்டும்தான்.

இதையும் படியுங்கள் : போலி என்கவுன்டரில் அமித் ஷா மிகப்பெரிய சதிகாரர் – தலைமை விசாரணை அதிகாரி

அமித் ஷா குறித்து வெளியான செய்தி ரிலையன்ஸ் நடத்தும் இணையதளங்கள், டைம்ஸ் நௌ, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் இருந்து நீக்கம்; என்ன நடந்தது ?

அமித் ஷா இயக்குநராக இருக்கும் கூட்டுறவு வங்கியில் ரூ.745 கோடி டெபாஸிட் – பண மதிப்பிழப்புக்குப் பிறகு என்பதுதான் விஷயமே!

அமித் ஷா வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதி லோயா மாரடைப்பால் மரணிக்கவில்லை: தடயவியல் நிபுணர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here