மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ (CBSE) 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ஆம் தேதி முடிவடைந்தது. 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

பொருளாதாரவியல் (Economics) பாடத்திற்கான கேள்வித்தாள் வாட்ஸ்-அப்பில் வெளியானதாக சர்ச்சை எழுந்ததையடுத்து, அந்த பாடத்துக்கான மறுதேர்வு ஏப்ரல் 25-ஆம் தேதி நடத்தப்பட்டது.

12-ஆம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ.-யின் இணைய தளங்களில் (cbse.nic.in) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில் உள்ள ரோல் நம்பர், பள்ளியின் எண் மற்றும் தேர்வு மைய எண் ஆகியவற்றை டைப் செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

ஒட்டுமொத்தமாக 83.01 சதவீத மாணவர்களும் , சென்னையில் 93.8 சதவீத மாணவர்களும் , திருவனந்தபுரத்தில் 97.32 சதவீத மாணவர்களும், டெல்லியில் 89 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் .

மாணவர்கள் தங்கள் பரீட்சை முடிவுகளை

(cbse.nic.in)

cbseresults.nic.in,

results.nic.in

cbse.examresults.net 
மற்றும் results.gov.in. ஆகிய தளங்கள் மூலம் அறிய முடியும்.

SMS வழியாகவும் பரீட்சை முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 52001 (MTNL), 57766 (பிஎஸ்என்எல்), 5800002 (ஏர்செல்), 55456068 (ஐடியா), 54321, 51234 மற்றும் 5333300 (டாடா டெலி சர்வீசஸ்), 54321202 (ஏர்டெல்) மற்றும் 9212357123 (தேசிய தகவல் மையம்) ஆகிய எண்கள் மூலம் SMS வழியாக பரீட்சை முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
.
இந்த ஆண்டு முதல் டிஜிலாக்கர்ஸில் ( Http://digilocker.gov.in ) 12-ஆம் வகுப்பு
மதிப்பெண்களை பெற்றுக் கொள்ளலாம் .

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியபாத்தைச் சேர்ந்த மேக்னா ஸ்ரீவத்சவ, 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்