மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்தியா முழுவதும் மார்ச் 5–ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4–ம் தேதி வரை நடைபெற்றது. 16,38,428 மாணவ, மாணவிகள் சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்பு தேர்வை எழுதினார்கள்.

இந்த தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டன . சிபிஎஸ்இ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான

cbse.nic.in,

cbseresults.nic.in ,

cbse.examresults.net,

results.gov.in

ஆகிய இணைதளங்களிலும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் நாடு முழுவதும் 86.70% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 88.67% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 85.32% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதிலும் வழக்கம்போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் .

ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த ப்ரகார் மிட்டல், உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோரை சேர்ந்த ரிம்ஷிம் அகர்வால், ஷாம்லியை சேர்ந்த நந்தினி கார்க் மற்றும் கேரளா கொச்சியை சேர்ந்த ஸ்ரீலக்‌ஷ்மி ஆகிய நான்கு பேரும் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர் .

திருவனந்தபுரத்தில் 99.60 சதவீத மாணவர்களும், சென்னையில் 97.37 சதவீத மாணவர்களும், அஜ்மீரில் 91.86 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here