பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பேருந்து கட்டணம், கடந்த 2011ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, சனிக்கிழமை (ஜன.21) முதல் அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1

2

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்