#Budget2018: ரூ.மதிப்பு: 63.63; எல்&டி, டிசிஎஸ் பங்குகள் உயர்வு

0
477

2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (இன்று) காலை முதல் உயர்வுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 151.46 புள்ளிகள் உயர்ந்து 36,116.48 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 40.40 புள்ளிகள் உயர்ந்து 11,068.10 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

market

நிஃப்டி பட்டியலிலுள்ள எல்&டி, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. அதேபோன்று கோல் இந்தியா, டாடா ஸ்டீல், சன் ஃபார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.66ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்