2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி (இன்று) தாக்கல் செய்தார். மத்தியில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு, நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் இதுவாகும். மேலும் இந்த அரசின் கடைசி முழு அளவிலான பட்ஜெட்டும் இதுவாகும்.

முக்கிய அம்சங்கள்

* கால்நடை மற்றும் மீன்வளத்துறைக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

* 4 கோடி கிராமப்புற வீடுகளுக்கு கட்டணமில்லா மின்சார இணைப்பு வழங்கப்படும்

* வேளாண் சந்தைகள் அமைக்க 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* 24 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்படும்

* 2 கோடி கழிப்பறைகள் அடுத்த ஒரு வருடத்தில் தூய்மை திட்டத்தின் மூலம் கட்டப்படும்

* உணவுப் பதப்ப்டுத்துதல் துறைக்கு 1,400 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* மூங்கில் துறைக்கு 1,290 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* பசுமைத் திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் மையங்களுக்கு 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* தேசிய வாழ்வாதாரத்திற்கான பணிகளுக்கு 5,750 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் மூன்று லட்சம் கோடி ரூபாய் கடனுதவி

* ஜவளித்துறை வளர்ச்சிக்காக 7,148 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* பழங்குடியினர் நலத்துறைக்கு 32,508 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* தாழ்த்தப்பட்டோர் நலத்துறைக்கு 52,719 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* ஜனாதிபதிக்கான ஊதியம் 1.5 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்வு

* துணை ஜனாதிபதிக்கான ஊதியம் நான்கு லட்சமாக உயர்வு

* விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியமும் உயர்த்தப்படும்

* அனைத்துத் தொழில் நிறுவனங்களுக்கும் ஆதார் அட்டை போன்ற அடையாள அட்டை வழங்கப்படும்

* பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் 80,000 கோடி ரூபாய் திரட்ட திட்டம்

* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்