பாரதிய ஜனதா கட்சியின் மாட்டிறைச்சி அரசியலை விமர்சித்து கர்நாடக மாநில காங்கிரசார் வீடியோவொன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்தாண்டில், கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, பாரதிய ஜனதா கட்சியினரும், காங்கிரஸ் கட்சியினரும் அதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், கர்நாடக மாநிலத்துக்கு சென்றிருந்த உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான அம்மாநில அரசைக் கடுமையாக விமர்சித்தார். இதனைத்தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கும், யோகி ஆதித்யநாத்திற்குமிடையே வார்த்தை மோதல் வெடித்தது.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மாட்டிறைச்சி அரசியலை விமர்சித்து கர்நாடக மாநில காங்கிரசார் வீடியோவொன்றை வெளியிட்டுள்ளனர். இதற்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர், காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடிவை விமர்சிக்கும் வகையிலான வீடியோவொன்றையும் வெளியிட்டிருந்தது.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here