டெல்லி பட்டாசு கிடங்கில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம தொடர்பாக ஆலையின் உரிமையாளரைப் போலீசார் கைது செய்தனர்.

டெல்லி பவானா தொழிற்பேட்டையில், பட்டாசு கிடங்கு ஒன்றில் சனிக்கிழமை (நேற்று) இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்து தீயணைப்புப் படையினர், தீயை அணைக்கு முயற்சியில் ஈடுபட்டனர். கடும் போராட்டத்துக்குப் பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

delhi1

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பட்டாசு கிடங்கின் உரிமையாளர் மனோஜ் ஜெயின் என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (இன்று) அவரைப் போலீசார் கைது செய்தனர்.

தீ விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணநிதி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். பவானா தொழிற்பேட்டையில் சனிக்கிழமையன்று மட்டும் மேலும் இரண்டு தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்