#ATPFinals: 300வது வெற்றியைப் பதிவு செய்த டொமினிக் தீம்: வெளியேறினார் ஜோகோவிச்

"It was for sure a mental battle. I got so tight in the second-set tie-break because to play these legends is always going to be something special," said Thiem in an on-court interview.

0
48

டாப் 8 வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று லண்டனில் நடந்து வருகிறது.

நேற்று(சனிக்கிழமை) நடைபெற்ற அரை இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் – உலகின் நம்பர் 3 வீரரான டொமினிக் தீம் மோதிக்கொண்டனர்.

முதல் செட்டில் 5-5 என சமநிலையில் இருந்தபோது, ஜோகோவிச்சிடம் இருந்து டொமினிக் தீம் போராடி 7-5 என வென்றார்.

இதையடுத்து, டை பிரேக்கர் வரை சென்ற இரண்டாவது செட்டை ஜோகோவிச் 7-6 என வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டும் டை பிரேக்கர் வரை சென்றது. இதில் சிறப்பாக ஆடிய தீம் 7-6 என கைப்பற்றி அசத்தினார்.

இறுதியில், இதில் டொமினிக் தீம் 7-5 6-7 (10), 7-6 (5) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தினார். 

இதன்மூலம் டொமினிக் தீம் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்த வெற்றி டொமினிக் தீமின் 300வது வெற்றி ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here