#ATPFinals: நடாலின் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான காத்திருப்பு தொடர்கிறது

.Dominic Thiem will take on Daniil Medvedev in the final of the 2020 Nitto ATP Finals on Sunday. .The Austrian leads the Russian 3-1 in the head-to-head.

0
56

டாப் 8 வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று லண்டனில் நடந்து வருகிறது.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இரண்டாவது அரை இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் 2 ஆம் நிலை வீரர், பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ரபெல் நடால்(ஸ்பெயின்) – உலகின் 4 ஆம் நிலை வீரரான டேனில் மெட்விடேவ்(ரஷியா) மோதிக்கொண்டனர்.

மிக விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில், மெட்விடேவ் 3-6, 7-6(4), 6-3 என்ற செட் கணக்கில் நடாலை வீழ்த்தினார். 

மெட்விடேவ் இந்த ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தான் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்தி விளையாடிய டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன், அலெக்சாண்டர் ஸ்வெரெவ், நோவக் ஜோகோவிச் மற்றும் ரபெல் நடால் ஆகியோரை தோற்கடித்து இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். 

இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் டொமினிக் தீம்- மெட்வதேவ் மோதுகிறார்கள். இருவருமே முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளனர். இதனால் முதல் சாம்பியன் பட்டத்தை வெல்ல இருவரும் ஆர்வத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here