#ATPFinals: அரை இறுதிக்கு தகுதி பெற்ற ஜோகோவிச்

World No. 1 Novak Djokovic moved one step closer to a record-equalling sixth title at the Nitto ATP Finals on Friday after a straight-sets victory over former champion Alexander Zverev secured his place in the semi-finals.

0
64

லண்டனில் ‘டாப் 8’ வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று நடைபெற்று வருகிறது.

8 வீரர்களும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் 4 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஒரு பிரிவில் டோமினிக் தீம் (ஆஸ்திரியா), மற்றொரு பிரிவில் மெத்வதேவ் (ரஷியா) ஆகியோர் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டனர்.

ஸ்வாட்மென் (அர்ஜென்டினா), ஆந்த்ரே ரூப்லேவ் (ரஷியா) ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மற்றொரு பிரிவில் நடந்த போட்டியில் 2 ஆம் நிலை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) – சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் மோதினர். இதில் ரபேல் நடால்6-4,4-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று அரை இறுதிக்கு தகுதிபெற்றார். 

நேற்று(வெள்ளிக்கிழமை) நடந்த லீக் ஆட்டத்தில் நம்பர் 1 வீரர் ஜோகோவிச்(செர்பியா)- அலெக்சாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி)மோதினர். 

இதில் 6-3, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் ஸ்வெரேவ்வை தோற்கடித்தார் ஜோகோவிச். இதன்மூலம் ஜோகோவிச் 9 வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

இன்று(சனிக்கிழமை) நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில்

  • நடால்(ஸ்பெயின்) – மெத்வதேவ்(ரஷியா)
  • ஜோகோவிச்(செர்பியா) – டொமினிக் தீம்(ஆஸ்திரியா)

ஆகியோர் மோதுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here