அமேசான் கிரேட் இந்தியன் சேல்அண்மையில் முடிவடைந்துள்ள நிலையில், தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று முதல் மீண்டும் வந்துள்ளது. 

அமேசான் நிறுவனம் கடந்த 10ம் தேதி, கிரேட் இந்தியன் சேல் என்ற பெயரில் அதிரடி விலை குறைப்பு விற்பனையை துவங்கியது. இதில் பல்வேறு பொருட்களுக்கு சலுகைகள், கேஷ் பேக் ஆஃபர் என்று விற்று வருகிறது. 

குறிப்பாக, ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அதிகப்படியான விலை குறைத்துள்ளது. சியோமி, ரெட்மி மொபைல்களுக்கு 1000 ரூபாய் வரையில் தள்ளுபடியும், சாம்சங் கேலக்ஸி விலை 2300 வரை தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டது. மேலும், அமேசான் கிண்டல், அமேசான் எக்கோ உள்ளிட்ட பிரத்யேக தயாரிப்புகளுக்கும் ஆஃபர் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அக்டோபர் 15ம் தேதி அமேசான் கிரேட் இந்தியன் சேல் நிறைவடைந்தது. 

இந்நிலையில், அமேசான் கிரேட் இந்தியன் சேல் அண்மையில் முடிவடைந்துள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் மீண்டும் வந்துள்ளது. இன்று அக்டோபர் 24ம் தேதி முதல் அக்டோபர் 28ம் தேதி வரையில் கிரேட் இந்தியன் சேல் நடைபெறுகிறது. தற்போது உள்ள அமேசான் கிரேட் இந்தியன் சேலில், ரெட்மி 6A ஸ்மார்ட்போன் 5,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும், 2,000 ரூபாய் மதிப்புள்ள இலவச ஸ்கிரீன் ரீப்ளேஸ்மெண்டும் வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here