விஜய் சேதுபதி நடிக்கும் அரைடஜனுக்கும் அதிகமான படங்களில் ஒன்று 96. ஏன் இதற்கு இப்படியொரு பெயர்?

96 படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்குகிறார். பிரேம் குமார் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளர். இவருக்கு நேர்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதே நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். அன்று ஒளிப்பதிவாளராக இருந்தவர் இன்று இயக்குநராக உயர்ந்திருக்கிறார்.

96 படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இவர்கள் இணையும் முதல் படம் இது. படத்துக்கு ஏன் 96 என்று பெயர்?

டீன்ஏஜ; விஜய் சேதுபதி முதல் 96 வயது விஜய் சேதுபதிவரை படத்தில் பல்வேறு தோற்றங்களில் விஜய் சேதுபதி வருகிறார். அதனால் இந்த பெயர் என்கிறார்கள். தவறு. 1996 இல் பத்தாம் வகுப்பு முடித்தவர்களின் கதையிது. அதனை குறிக்கவே 96 என பெயர் வைத்துள்ளனர். ஆம், விஜய் சேதுபதி பத்தாவது படிப்பவராகவும் ஒரு ரோல் செய்திருக்கிறாராம்.

கேட்கிறப்பவே கிலியா இருக்கே.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்