92ஆவது ஆஸ்கர் விருதுகள் : சிறந்த நடிகர், சிறந்த நடிகைக்கான விருதுகள் அறிவிப்பு

The 2020 Oscars took place on Sunday night, and during an evening devoted to honoring the best and brightest cinematic accomplishments of the previous year, director Bong Joon-Ho’s Parasite was the big winner.

0
326

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 92வது ஆஸ்கார்விருது வழங்கும்விழா இன்றுதொடங்கியது.  ஹாலிவுட்டில் வெளியான படங்களையும், கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது.

இதில் சிறந்த துணை நடிகருக்கான விருது முதலில் அறிவிக்கப்பட்டது.  ‘ஒன்ஸ்அபான் எடைம்… இன்ஹாலிவுட்’ என்ற படத்தில் நடித்த நடிகர் பிராட்பிட் சிறந்ததுணை நடிகருக்கான விருதுவென்றார். 

இதேபோன்று மேரேஜ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்த லாராடெர்ன் சிறந்த துணை நடிகைக்கான விருதுவென்றார்.

ஜோக்கர் (JOKER) படத்தில் நடித்த ஜோக்குயின் பீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான விருதுவென்றார். 

இதேபோன்று ஜூடி(JUDY) படத்தில் நடித்தரெனீ ஜெல்வெஜெர் சிறந்த நடிகைக்கான விருது வென்றுள்ளார்.

சிறந்த படம் பாராசைட் (PARASITE) தேர்வு செய்யப்பட்டது.  சிறந்த இயக்குனர் விருது இதே படத்திற்காக போங்ஜூன்-ஹோ வென்றுள்ளார். இவற்றில் பாராசைட் படத்திற்கு சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குனர் ஆகிய 3 விருதுகள் கிடைத்துள்ளன.

விருது பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு:

சிறந்த நடிகர்: வாக்குவின் ஃபீனிக்ஸ் (ஜோக்கர்)

சிறந்த நடிகை: ரெனே செல்வேகர் (ஜூடி)

சிறந்த திரைப்படம்: பாரசைட்

சிறந்த துணை நடிகர்: பிராட் பிட் (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்)

சிறந்த துணை நடிகை: லாரா டெர்ன் (மேரேஜ் ஸ்டோரி) 

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்

சிறந்த ஆவணப் படம்: ஃபேக்டரி

சிறந்த ஆடை வடிவமைப்பு: ஜாக்குலின் டுரன் (வுமன்)

சிறந்த திரைக்கதை: பாங் ஜூன் ஹோ (பாரசைட்)

சிறந்த இயக்குநர்:  பாங் ஜூன் ஹோ (பாரசைட்)

சிறந்த சர்வதேசத் திரைப்படம்: பாரசைட்

சிறந்த தழுவப்பட்ட திரைப்படம்: தைக்கா வைத்தி (ஜோ ஜோ ராபிட்)

சிறந்த ஒளிப்பதிவு மற்றும் ஒலிக்கலவை: 1917

சிறந்த படத்தொகுப்பு மற்றும் ஒலித்தொகுப்பு: ஃபோர்ட் Vs ஃபெராரி

சிறந்த அனிமேஷன் திரைப்படம்: டாய் ஸ்டோரி 4

சிறந்த ஆவணப்படம்: பாரக் மிட்செல் ஒபாமா தம்பதி தயாரித்த அமெரிக்கன் ஃபேக்டரி

சிறந்த பின்னணிப் பாடல்: சர் எல்டன் ஜான், பெர்னி தாபின் (ராக்கெட் மேன்)

சிறந்த பின்னணி இசை: ஹில்டுர் (ஜோக்கர்)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்: காஸ் ஹிரோ, ஆனி மோர்கன் விவியன் பேக்கர் (பாம் ஷெல்)

சிறந்த விஷுவல் எஃபக்ட்ஸ்: கிாயம் ரோச்சன், கிரேக் பட்லர், டாமினிக் டூயி(1917)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here