’91.1% தேர்ச்சி’: பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின

0
304

தமிழகத்தில் 2018 மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 (மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்) தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் புதன்கிழமை (இன்று) வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் புதன்கிழமை (இன்று) காலை 09.30 மணிக்கு வெளியாகின. இதில் மாநில அளவில் 91.1 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் மாணவிகள் 94.1%, மாணவர்கள் 87.7% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 6.4% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 238.

பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம், ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தையும், திருப்பூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்தது

2018 மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8.67 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதற்கான முடிவுகள் காலை 09.30 மணிக்கு http://tnresults.nic.in/ ; http://www.dge1.tn.nic.in/ , http://www.dge2.tn.nic.in/ ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. எஸ்.எம்.எஸ் மூலமும் முடிவுகள் அனுப்பப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 6,754. 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,907.இதில் 2,574 அரசு மேல்நிலைப் பள்ளிகள் ஆகும்.

இதையும் படியுங்கள்: சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு 100 கோடி லஞ்சம் ; காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்