டெலிகாம் துறையில் அடுத்த ஆறு மாதங்களில் 90 ஆயிரம் பேர் வரை வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் இத்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தற்போது டெலிகாம் நிறுவனங்களிடையே ஏற்பட்டுள்ள தொழில் போட்டியால், ஒவ்வொரு நிறுவனங்களும் வாடிக்கயாளர்களைக் கவர்வதற்காகவும், தக்க வைத்துக்கொள்வதற்காகவும் சலுகைகளைக் குறைத்துக் கொண்டு வருகின்றன.

இந்நிலையில் டெலிகாம் துறையில் பணி பாதுகாப்பு குறித்து, சுமார் 65 நிறுவனங்களிலும், டெலிகாம் துறைக்கு மென்பொருள் சேவை வழங்கி வரும் நிறுவனங்களிலும் பணிபுரியும் ஊழியர்களிடமும் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. கடந்த வருடம் 40 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளதாகவும், இதன் தொடர்ச்சி இன்னும் அடுத்த ஆறு மாதம் வரை இருக்கும் எனவும் தெரிய வந்துள்ளது. இதன் எண்ணிக்கை 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

நன்றி: Hindustan Times

இதையும் படியுங்கள்: “கப்பல் படையில் மீனவர்களைச் சேருங்கள்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்