9 வயது சிறுவர்கள் உட்பட 144 சிறுவர்களை கைது செய்தோம்- உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட காஷ்மீர் அரசு

Of these, 142 had already been released and only two were still in juvenile homes, the report said, citing information provided by the police and other state agencies.

0
676

கைது செய்யப்பட்ட 144  சிறுவர்களில் 142 பேரை விடுவித்துவிட்டதாகவும், 2 பேர் சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில் இருப்பதாகவும் ஜம்மு காஷ்மீர் அரசின் அறிக்கை தெரிவிக்கிறது .  

ஜம்மு – காஷ்மீர் நீதிமன்றத்தின்  சிறுவர்களுக்குரிய நீதிக் குழு 9 வயது  முதல் 17 வயது வரையிலான   144 சிறுவர்களை கைது செய்தோம் என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.   அச்சிறுவர்கள் சட்டத்துக்கு முரண்பட்டவர்களாக இருந்தார்கள் அதனாலேயே கைது செய்தோம் என்றும் ஜம்மு – காஷ்மீர் நீதிமன்றத்தின்  சிறுவர்களுக்குரிய நீதிக் குழு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தக் கைதுகள் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நாளான ஆகஸ்ட் 5 ஆம் தேதியிலிருந்து நடந்தேறியது  

இந்த 144 சிறுவர்களில் 142 பேரை விடுவித்து விட்டோம். மீதமுள்ள 2 பேர் மட்டும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருக்கிறார்கள் என்று அரசின் அறிக்கை கூறுகிறது . காவல்துறையினர் மாநில நிறுவனங்கள் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த அரசின் அறிக்கை தயாரானதாக அரசு கூறியுள்ளது.   

சட்டவிரோதமாக காவலில் வைக்கப்படவில்லை என்றும் மாநில அரசு இயந்திரம் தொடர்ச்சியாக சட்டத்தின் ஆட்சியை கடைபிடிக்கிறது என்றும் மாநில காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) தமக்கு அனுப்பிய அறிக்கையை மேற்கோள்காட்டுகிறது இந்த அறிக்கை.

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பான குற்றச்சாட்டுகள் களத்தில் இருந்து தருவிக்கப்பட்ட தகவல்களுடன் பொருந்திப் போகவில்லை. சட்டவிரோதமாக சிறுவர்களை போலீசார் கைது செய்து தங்கள் காவலில் வைத்துள்ளதாக குறிப்பிடும் ஒவ்வொரு தனித்தனி புகாரும் உண்மைக்கு மாறாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது  என்று டிஜிபி அறிக்கை கூறுவதாகத் தெரிவிக்கிறது இந்த அரசின் அறிக்கை. 

இது தொடர்பாக வெளியான ஊடக செய்திகள், காவல்துறையை களங்கப்படுத்தும் நோக்கத்துடனும், பரபரப்பான செய்தி தரவேண்டும் என்பதற்காகவும், கற்பனையாகவும் வெளியிடப்பட்டவை என்று கூறி அவற்றை டிஜிபி மறுத்துவிட்டதாகவும் கூறுகிறது அந்த அறிக்கை.

சிறுவர்கள் கல்லெறியும் வேலைகளில் ஈடுபடும்போது உடனடியாக அவர்கள் அதே இடத்தில் கைது செய்யப்பட்டு சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பப்படுவதாகவும், இவற்றில் சில சம்பவங்கள் மிகைப்படுத்தப்படுவதாகவும் டிஜிபி அறிக்கையை மேற்கோள் காட்டி சிறுவர்களுக்கான  நீதிக்குழு தாக்கல் செய்த அறிக்கை கூறுகிறது.

ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி அலி மொஹம்மது மக்ரே தலைமையிலான நால்வர் குழுவால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, உச்சநீதிமன்றத்தின் என்.வி.ரமணா, ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அமர்வுதான் ஜம்மு காஷ்மீர் தொடர்பான விவகாரங்களை விசாரிக்கிறது.

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை அடுத்த ஜம்மு காஷ்மீரில் சிறுவர்கள் கைது செய்யப்பட்டு சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு பொது நல வழக்கில் கூறப்பட்டுள்ளதை அடுத்து கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் சிறுவர்களுக்கான  நீதிக் குழுவை அது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டது.

குழந்தைகள் உரிமைக்கான தேசிய ஆணையத்தின் முதல் தலைவரும் பிரபல குழந்தை உரிமை செயற்பாட்டாளருமான எனாக்ஷி கங்குலி இந்த பொது நல வழக்கைத் தொடர்ந்தார்.

https://indianexpress.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here