இந்திய பொதுத்துறை வங்கிகளில் 800 கோடி ரூபாய்க்கும் கடனைப் பெற்றுவிட்டு அதனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு தொழிலதிபர் விக்ரம் கோத்தாரி என்பவர் மீது எழுந்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையொன்றில் 11,400 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வைர வியாபாரியான நீரவ் மோடி, மீது அமலாக்கத்துறையினர் மற்றும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் தொழிலதிபர் விக்ரம் கோத்தாரி என்பவர் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து 800 கோடி ரூபாய் வரை கடன் பெற்றிவிட்டு அதனைத் திருப்பிச் செலுத்தாத விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கான்பூரை மையமாகக் கொண்டு செயல்படும் ரோட்டோமேக் பேனா நிறுவனத்தின் உரிமையாளரான விக்ரம் கோத்தாரி, அலகாபாத் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட ஐந்து வங்கிகளில் 800 கோடி ரூபாய்க்கும்மேல் கடனாகப் பெற்றுள்ளார். இந்தப் பொதுத்துறை வங்கிகள், தங்களது விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்து இவருக்கு கடன் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மும்பை கிளையில் 485 கோடி ரூபாயும், அலகாபாத் வங்கி கொல்கத்தா கிளையில் 352 கோடி ரூபாயும் கடனாகப் பெற்ற விக்ரம் கோத்தாரி, இதனைத் திருப்பிச் செலுத்தவில்லை. இந்நிலையில் விக்ரம் கோத்தாரி, தலைமறைவாகி விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள விக்ரம் கோத்தாரி, தான் எங்கும் செல்லவில்லை என்றும், கான்பூரில்தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: எழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை? இதைப் பாருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here