80 கோடி ஏழை மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி; 1 கிலோ பருப்பு

*Over and above 5kg of rice/wheat that is already given, another 5 kg per person will be given free to around 80 crore people through PDS. Besides, one kg of preferred and region specific choice of pulse will also be given.

0
115

நாட்டில் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 

இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய நிதியமைச்சர் ,  இந்தியாவில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நாடு தழுவிய ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும். இதற்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

80 கோடி ஏழை மக்களுக்கு உதவும் வகையில் ‘கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அடுத்த 3 மாதத்திற்கு தலா 5 கிலோ அரிசி/கோதுமை கூடுதலாக வழங்கப்படும். இத்துடன் 1 கிலோ பருப்பு கூடுதலாக வழங்ப்படும். இவை இரண்டுமே  இலவசமாக வழங்கப்படும்  என்று தெரிவித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here