80 ஆயிரம் அகதிகளை வெளியேற்றுகிறது சுவீடன்

0
504

சுவீடன் நாட்டில் உள்ள 80 ஆயிரம் அகதிகளை வெளியேற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அவர்களின் புகலிட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் அகதிகள் திருப்பி அனுப்பப்பட உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுவீடனில் 2015ஆம் ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 63 ஆயிரம் புகலிட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 58 ஆயிரத்து 800 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சுமார் 55 சதவீதம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அகதிகள் அதிகம் வருவதை கட்டுப்படுத்தும் வகையில் எல்லை பரிசோதனை முறை ஒன்றை அந்நாடு அறிமுகப்படுத்தியுள்ளது.

797989d3661e4f7380bc6ee2cee6cc34_18

2015ஆம் ஆண்டு மட்டும் 35 ஆயிரத்து 400 ஆதரவற்ற சிறுவர்கள் புகலிடம் கேட்டு காத்திருப்பதாகவும், இது 2014ஆம் ஆண்டைவிட அய்ந்து மடங்கு கூடுதல் என்றும் சுவிடன் நாட்டு குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்