8 மாதங்களில் இல்லாத அளவு அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு

0
433

வியாழக்கிழமைக்காலை    71.65 ரூபாயுடன் தொடங்கி 71.97 ரூபாயை எட்டி 71.81 ரூபாயில் நிறைவடைந்த‍து. 

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எட்டு மாத‍ங்களில் இல்லாத சரிவைச் சந்தித்துள்ளது. 

இன்றைய நாளில் ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்தற்கான காரணங்கள்:

1. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.90 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத‍த்திலிருந்து ரூபாயின் மதிப்பு அதிகபட்ச சரிவை எட்டியுள்ளது. 

2. அமெரிக்கா – சீனா வர்த்தகப் போரின் காரணமாக சீனாவின் பணமான யுயான்(yuan), 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவடைந்துள்ளது.

3.அமெரிக்க டாலருக்கு நிகரான சீனாவின் யுயான் மதிப்பு 0.34 சதவீத‍ சரிவையடைந்து, 7.0875 ஆக அதிகரித்துள்ளது. 2008-ஆம் ஆண்டு மார்ச்சுக்கு பிறகு இந்த அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது. 

4. சீனாவின் யுயானின் மதிப்பு சரிவைச் சந்தித்ததாலும் உள்நாட்டு பங்கு சரிவடைந்த‍தாலும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்த‍து. இந்த நிதியாண்டை ஊக்கமளிக்க தேவையில்லை’ என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் தெரிவித்த‍தாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

5. டாலருக்கான அளவீடுகள், டாலரின் மதிப்பு ஆறு நாட்டு பணத்துக்கு எதிராக 0.02 சதவீத‍ம் முதல் 98.31 சதவீத‍ம் வரை அதிகரித்துள்ளதைக் குறிப்பிடுகிறது. 

6. கச்சா எண்ணெயின் விலை அளவு 0.75 சதவீத‍ம் அதிகரித்துள்ளது. உலக அளவில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் அளவு 60.75 அமெரிக்க டாலராக உள்ளது. 

7. சந்தை மூலதனத்திலிருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 902.99 கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர் என்று தேசிய பங்குச் சந்தையின் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. 

8. விற்பனை அழுத்தத்தின் காரணமாக கடந்த ஆறு மாத‍ங்களில் உள்நாட்டு பங்குச் சந்தைகள் கடுமையாக சரிவைச் சந்தித்துள்ளன. 


9. 10 ஆண்டு அரசுப் பத்திரம் 6.56 சதவீத‍ சரிவைச் சந்தித்துள்ளது.


 

http://ndtv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here