போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் எட்டாவது நாளாகத் தொடர்கிறது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த வியாழக்கிழமை (ஜன.4) முதல், போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் சிஐடியூ, தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இந்தப் போராட்டம் எட்டவாது நாளாக தொடர்கிறது.

ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 750 கோடி ரூபாய் நிலுவைத் தொகை பொங்கலுக்கு முன் வழங்கப்படும் என்றும், ஆகையால் பொது மக்களின் நலன் கருதி, போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை உடனடியாக கைவிட்டு, பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத் தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்து விட்டன.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்