எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இல்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்யவும், அந்த வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதனையடுத்து மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறிக்கும் வகையிலான தமிழக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும் இது தொடர்பான தகவல் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியது.

sengottaiyan

இந்நிலையில், இது தொடர்பாக வீண் வதந்திகள் பரப்பப்படுவதாகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து எந்த ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ,

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here