பாகுபலி தேசிய அளவு என்றால் சங்கமித்ரா சர்வதேசியம்

0
94
Jayam Ravi in Sangamithra

பாகுபலி தென்னிந்திய சினிமாவை தேசிய அளவில் கொண்டு சென்றது என்றால், சங்கமித்ரா இந்திய சினிமாவை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் என்று இயக்குனர் சுந்தர் சி. கூறியுள்ளார்.

தேனாண்டாள் தயாரிப்பில் மிகப்பிரமாண்டமாக சங்கமித்ரா என்ற சரித்திரப் படத்தை சுந்தர் சி. இயக்குகிறார். இதன் தொடக்கவிழா கான் திரைப்பட விழாவில் நடந்தது. ரஹ்மான், சாபு சிரில், திரு, கமலக்கண்ணன் என்று திறமைசாலிகளாக பார்த்து கோர்த்துள்ளனர். ஸ்ருதி நாயகியாகவும், ஜெயம் ரவி, ஆர்யா முக்கிய வேடங்களிலும் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனத்தில் எழுத்தாளர் பிரபஞ்சன் பங்களிப்பு செலுத்தியுள்ளார்.

இந்தப் படம் குறித்து முதல் முதலாக பேசிய சுந்தர் சி., பாகுபலி தென்னிந்திய சினிமாவை தேசிய அளவில் கொண்டு சென்றது என்றால் சங்கமித்ரா இந்திய சினிமாவை சர்வதேச அளவில் எடுத்துச் செல்லும். அதுவே எங்களின் நோக்கம் என்றார். அதன் காரணமாகவே கான் திரைப்பட விழாவில் படத்தை தொடங்கினோம் என்றும் அவர் கூறினார்.

மேற்கத்திய சாயலின்றி அசலான இந்திய திரைப்படமாக சங்கமித்ராவை எடுக்கவிருக்கிறார்கள். இந்தியாவின் சேரிகளையும், வறுமையையும் காட்சிப்படுத்திய சினிமாக்களுக்கு மாறாக இந்தியாவின் செழுமையையும், கலை, வீர பாரம்பரியத்தையும், அதன் கொண்டாட்டங்களையும் சொல்லும் படமாக சங்கமித்ராவை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

Screen Shot 2017-05-23 at 12.07.37 AM

இதையும் படியுங்கள்: ரஜினியின் அரசியல் பிரவேசத்தில் தொடரும் குழப்பங்கள்

இதையும் படியுங்கள்:ராணுவ ஜீப்பில் அருந்ததி ராயை கட்டி வைக்கலாம்’: பாஜக எம்.பி.யின் கருத்தால் சர்ச்சை

இதையும் படியுங்கள்: Lalit Modi case exposes Chennai Police Commissioners’ shameful cover-ups

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்