71 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியுடன் பிஎஸ்என்எல் வழங்கும் குடியரசு தின சலுகை

0
235

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 71வது குடியரசு தினத்தையொட்டி ரூ. 1999 விலை சலுகையில் 71 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியுடன் ப்ரீபெய்ட் மொபைல் சேவையில் சிறப்புச் சலுகையை வழங்குவதாக அறிவித்துள்ளது. புதிய சலுகை ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, பிளான் ரூ.1,999ன் வேலிடிட்டியை 345 நாட்களுக்கு பதிலாக 71 நாட்கள் அதிகரித்து 436 நாட்களுக்கு வழங்குகிறது. 

ரூ.1,999 பிளானில் தினம் மூன்று ஜீ பி டேட்டாவும் அளவில்லா அழைப்புகளும், 100 குறுஞ்செய்தி வசதிகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பிளான் 1999ல் பிஎஸ்என்எல் டியூன் மற்றும் பிஎஸ்என்எல் டீவி சந்தா 365 நாட்களுக்கு இலவசமாக கிடைக்கும். இச்சலுகை 26 ஜனவரி 2020 முதல் 15 பிப்ரவரி 2020 வரை ரீசார்ஜ் செய்பவர்களுக்குக் கிடைக்கும்.

பி.எஸ்.என்.எல். ரூ. 1999 சலுகை 2018 ஆம் ஆண்டில் முதல்முறையாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக இந்த சலுகையில் தினமும் 2 ஜி.பி. அதிவேக டேட்டா வழங்கப்பட்டது. பின் கடந்த ஆண்டு தினசரி டேட்டா அளவில் மாற்றம் செய்யப்பட்டு, தினமும் ஒரு ஜி.பி. டேட்டா கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here