காக்னிசண்ட்(Cognizant) நிறுவனத்தில் சுமார் 7000 பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் காக்னிசண்ட் தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் இந்தியர்கள் பலர் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதத்தில் காக்னிசண்ட் நிறுவனத்தில் 2 லட்சம் இந்தியர்கள் வேலை பார்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது காக்னிசண்ட் நிறுவனம், அடுத்து வரும் சில மாதங்களில் கிட்டதட்ட 7000 பணியாளர்களை நீக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் பெரும்பாலான இந்திய சாப்ட்வேர் என்ஜீனியர்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. 

பணியில் இருக்கும் நடுத்தர ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை 10,000 – 12,000 பேர் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என ஏற்கனவே காக்னிசண்ட் கூறியிருந்தது. 5000 பேரை திறன் மேம்பாடு மற்றும் மறுசேர்க்கை செய்வதாகவும் கூறியிருந்தது.

மொத்த பணி நீக்கத்தில் இந்தியாவில் சுமார் 5000 – 7000 பேர் வரையில் இருக்கலாம் என்றும், இது நிறுவனத்தின் செலவு குறைப்பு திட்டத்தின் ஒரு பகுதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் எவ்வளவு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்ற முழு விளக்கத்தை இந்த நிறுவனம் அளிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here