ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி நடித்துள்ள படம் தர்பார். இத்திரைப்படம் நாளை(வியாழக்கிழமை) ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில், ‘தர்பார்’ படம் உலகம் முழுவதும் 7000 தியேட்டர்களில் வெளியாகிறது என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இதில், இந்தியாவில் மட்டும் 4000 தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டது.

இப்படிப்பட்ட அறிவிப்பைப் பார்த்து கோலிவுட்டில் ஆச்சரியப்படுகிறார்கள். ‘பாகுபலி 2’ படம் உலகம் முழுவதும் 9000 தியேட்டர்களில் வெளியானதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அப்படி வெளியானதா என்பதை யாரும் அதிகாரபூர்வமாகக்  கணக்கிட்டெல்லாம் பார்க்கவில்லை.

ரஜினிகாந்த் போன்ற நடிகர்களின் படங்கள் வெளிவரும் போது அந்தப் படத்தை ஓட வைப்பதற்காகத் தயாரிப்பு தரப்பிலிருந்து பல விஷயங்களை சொல்லுவார்கள். ‘தர்பார்’ படம் நாளை ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகிறது. அதற்கு மறுநாள் அஜய் தேவ்கன் நடித்துளள ‘தன்ஹாஜி’, தீபிகா படுகோனே நடித்துள்ள ‘சப்பக்’ ஆகிய ஹிந்திப் படங்கள் வெளியாகின்றன.

‘தன்ஹாஜி’ படம் வட இந்தியாவில் 3500 தியேட்டர்களுக்கு மேல் வெளியாகிறது. ‘சப்பக்’ படம் 1000 தியேட்டர்களுக்கு மேலும், ‘தர்பார்’ படம் 800 தியேட்டர்களுக்கு அதிகமாவும் வெளியாகும் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் ‘தர்பார்’ படம் சுமார் 500 தியேட்டர்களிலும், மற்ற தென்னிந்திய மாநிலங்களில் சுமார் 500 தியேட்டர்களிலும் மட்டுமே வெளியாக வாய்ப்புள்ளது என்கிறார்கள். மொத்தமாக 2000 தியேட்டர்கள் வரை இந்தியாவில் வெளியாகலாம்.

வெளிநாடுகளில் ஒட்டு மொத்தமாக 1000 தியேட்டர்கள் வரை மட்டுமே வெளியாக வாய்ப்புள்ளது. அமெரிக்கா, அரேபியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய தமிழர் வாழும் இடங்களில் தான் ஒரு தமிழ்ப் படம் அதிகமாக வெளியாகும். மலேசியாவில் ‘தர்பார்’ படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் மொத்தமாக 3000 முதல் 4000 தியேட்டர்கள் வரைதான் ‘தர்பார்’ படம் வெளியாக வாய்ப்புள்ளது. அப்படியிருக்கையில் 7000 தியேட்டர்களில் வெளியாகிறது என ஒரு பரபரப்பிற்காக லைகா நிறுவனம் தவறான தகவலைப் பரப்பி வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

படத்திற்கான முதல் நாள் முன்பதிவு மட்டுமே விறுவிறுப்பாக உள்ள நிலையில் படத்திற்கு செலவு செய்யப்பட்ட தொகையை விட அதிகமாக வசூலிக்க அடுத்த சில நாட்களில் மேலும் பரபரப்பூட்டும் தகவல்களை தயாரிப்பு நிறுவனம் தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என பலரும் கூறுவது நம் காதுகளில் விழத்தான் செய்கிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here