7 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகே கொரோனா பரிசோதனை: மும்பை மாநகராட்சி

0
201

கொரோனா அறிகுறியுடன் இருப்பவர்களை 7 நாட்களுக்குள் சோதனை செய்தால் எதிர்மறை முடிவு வரக்கூடும் என்பதால் 7 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகே சோதனை செய்யப்படுகிறது, என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்தியாவில்  மேற்கொள்ளப்பட்ட மொத்த கொரோனா வைரஸ் தொற்று சோதனைகளில் மும்பையில் மட்டும் 12 சதவீதத்திற்கு மேற்பட்ட சோதனைகள் செய்யப்பட்டதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஏப்.,13 வரை மும்பையில் மட்டும் 27,397 பேருக்கு கொரோனா வைரஸ் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 2,17,554 சோதனைகளில் 12.59 சதவீதமாகும்.

மும்பையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டாலும் எந்தவொரு சமூக பரவலும் ஏற்படவில்லை. கொரோனா அறிகுறியுடன் இருப்பவர்களை ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே சோதனைகள் நடத்த முடிவு செய்துள்ளோம். ஏழு நாட்களுக்குள் சோதனை மேற்கொண்டால், பெரும்பாலும் எதிர்மறையான முடிவு வெளிவருவதை காண முடிகிறது. மருத்துவ அடிப்படையில், இதுபோன்ற சோதனைகள் தவறான எதிர்மறை என்று அழைக்கப்படுகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here