7 நாடுகளுக்கு பரவிய கரோனா வைரஸ் : 80 பேர் பலி

0
264

சீனாவின் வுஹான் நகரில் பரவியுள்ள கரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. இரண்டாயிரத்து 700க்கும் மேற்பட்டோருக்கு இந்நோயின் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 450க்கும் மேற்பட்ட நோயாளிகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவில் 5 பேருக்கு இந்நோய்க்கூறு பரவியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு கரனோ வைரஸ் பரவி இருப்பதையடுத்து பல்வேறு விமான நிலையங்களில் மருத்துவ சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன . உலகின் பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் குறித்த பதற்றம் பரவி வருகிறது.

வுஹானில் உள்ள அமெரிக்கர்களை சான்பிரான்சிஸ்கோவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை சீன அரசு தொடங்கியுள்ளது. இதனால் இந்திய மாணவர்களும் நாடு திரும்பும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும் நோய் பரவாமல் தடுக்க சீனாவில் இருந்து வெளியிடங்களுக்கு விலங்குகள், இறைச்சி போன்றவற்றை ஏற்றுமதி செய்வதற்கும் சீன அரசு தடை விதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here