உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்து மல்கோத்ரா இன்று (ஏப்.27) பதவியேற்றுக் கொண்டார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞச்ன் கோகாய், மதன் பி லோகூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய கொலிஜியம், இரண்டு பேரை உச்சநீதிமன்ற பதவிக்குப் பரிந்துரைத்தது. இதில் உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜேசப் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றிய இந்து மல்கோத்ரா ஆகியோர் ஆவர்.

supremecourt-696x477

இந்தப் பரிந்துரையில், இந்து மல்கோத்ரா நியமனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து, இன்று (ஏப்.27) உச்சநீதிமன்ற நீதிபதியாக அவர் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.

7வது பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா:

இதுவரை ஆறு பெண் நீதிபதிகள் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்துள்ளனர். இதற்கு முன்னர் பாத்திமா பீவி, சுஜாதா மனோகர், ரூமா பால், கியான் சுதா மிஸ்ரா, ரஞ்சானா தேசாய் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி வகித்துள்ளனர். தற்போது ஆர். பானுமதி உச்சநீதிமன்ற நீதிபதியாகவுள்ளார். இவரைத் தொடர்ந்து ஏழாவது பெண் நீதிபதியாக இந்து மல்கோத்ரா பதவியேற்றுக்கொண்டார்.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்